திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரசேத்தில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பிரசேத்தில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞர் கைது

திருகோணமலை சீனன்குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெள்ளை மணல் நாச்சிக்குடா பிரசேத்தில் வைத்து கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

2 கிலோவும் 200 கிராம் கேரளா கஞ்ஞாவுடன் அண்ணல் நகர் கிண்ணியாவைச் சேர்ந்த 24வயதுடைய இளைஞர் ஒருவரையே பொலிஸ் விஷேட அதிரடிப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களை அடுத்து பொலிஸ் விஷேட அதிரடி படையினர் குறித்த நபரை கைதுசெய்து சீனன்குடா பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடைவடிக்கையை சீனன்குடா பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]