திருகோணமலையில் 2000 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்

திருகோணமலையில் 2000 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டனர்

திருகோணமலை, உப்புவெளி பிரதேசத்தில் அலஸ்தோட்டம் மற்றும் ஆனந்தபுரி பிரதேங்களில் நேற்று இரவு 2 கிலோ 100 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

திருகோணமலை பிராந்திய விஷத்தன்மையுடைய போதைபொருள் ஒழிப்பு பிரிவினர் இதனைத் தெரிவித்தனர்.

500 கிராம் கேரளா கஞ்சாவுடன் ஆனந்தபுரியில் 41 வயதானவரும் 1600 கிராம் கேரளா கஞ்சாவுடன் அலஸ்தோட்டத்தில் 47 வயதான ஒருவரும் கைதுசெய்யப்பட்டனர்.

மேலும்ன கடற்படையின் புலனாய்வு பிரிவிரின் இரகசிய தகவல்களுடனும் அவர்களின் ஒத்துழைப்புடனும் இந்த சுற்றிவளைப்புகள் இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பவர்களையும் கைப்பற்றப்பட்ட கேரளா கஞ்சாவையும் உப்புவெளி பொலிஸார் வசம் ஒப்படைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]