திருகோணமலையில் சிறியளவிலான நிலநடுக்கம்

திருகோணமலையில் சிறியளவிலான நிலநடுக்கம்

திருகோணமலையில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கமானது 3.5 ரிக்டர் அளவில் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தினால் எவ்வித பாதிப்புகளும் இல்லை என புவியில் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தின் பணிப்பாளர் சந்திரவர்தன சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

கின்னியா, சம்பூர், மூதூர் ஆகிய பகுதிகளுக்கே நிலநடுக்கத்தின் அதிர்வு அதிகமாகக் காணப்பட்டதாகவும், ஏனைய பகுதிகளுக்கு மிகக் குறைந்தளவிலான அதிர்வே உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]