திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்கக் கப்பல்

அமெரிக்கக் கடற்படையின் பாரிய கப்பல் ஒன்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

யுஎஸ்எஸ் அங்கரேஜ் (USS ANCHORAGE) என்ற கப்பலே ஐந்து நாட்கள் பயணமாக நேற்று (வெள்ளிக்கிழமை) திருகோணமலைத் துறைமுகத்தை வந்து சேரந்துள்ளது.

ஈரூடக தரையிறக்க போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் அங்கரேஜில் அமெரிக்க கடற்படையினர் மற்றும் அமெரிக்க மரைன் படைப்பிரிவின் 13 ஆவது அதிரடிப்படைப் பிரிவைச் சேர்ந்த படையினரும் திருகோணமலை வந்துள்ளனர்.

208 மீற்றர் நீளமான இந்தக் கப்பலில் உள்ள 34 அதிகாரிகளும் 900 படையினரும், திருகோணமலையில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் நிலையில், இலங்கை கடற்படையின் மரைன் படையினருடன் இணைந்து பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர்.

மேலும் இந்து சமுத்திரத்தில் சீனாவின் பிரசன்னம் தொடர்பான அச்சங்கள் வலுவடைந்துவரும் நிலையில் இலங்கையை நோக்கி கடற்படைக்கப்பல்களின் வருகைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]