புதிய உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்க நடவடிககை

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உள்ளுராட்சி மன்றங்களை உருவாக்குவதற்கு மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சு உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்

மட்டக்கள்பபு மாவட்டத்தில் புதிய உள்ளுராட்சி மன்றங்கள் அமைப்பதற்கு தொடர்பாக நேற்று (28)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தெடர்ந்து தெரிவிக்கையில் – மட்டக்களபபு மாவட்டதில் கோறளை பற்று பிரதேச சபை எல்லைக்குள் கோறளை பற்று தெற்கு (கிரான்) மற்றும் கோறளை பற்று மத்தி என இரண்டு புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்படவேண்டும் எனவும் கோறளை பற்று பிரதேச செயலக பிரிவிற்கு நகர சபை உருவாக்கப்பட வேண்டும் என பாராளுமன்றத்திலும் சம்பந்தப்பட்ட உள்ளுராட்சி மாகாணசபைகள் அமைச்சிடமும் நான் பல முறை வலியுறுத்தியுள்ளேன்.

எனது கோரிக்கைக்கு அமைய இப் பிரதேச சபைகளை உருவாக்குவதற்கான முறையான அறிக்கைகளினை சமர்பிக்க மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சினால் அரசாங்க அதிபர், கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சு செயலாளர், மாவட்ட நில அளவை உதவி அத்தியட்சகர், பிராந்திய உதவி உள்ளுராட்சி ஆனையாளர் மற்றும் புள்ளி விபர திணைக்கள அதிகாரி ஆகியோரை கொண்ட உயர் மட்ட நிர்வாக குழு நியமனம் செய்யப்பட்;டுள்ளது. அக்குழு தமது அறிக்கையினை இம் மாத முடிவுக்குள் அமைச்சுக்கு சமர்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

புதிய உள்ளுராட்சி மன்றங்களினை உருவாக்குவதன் மூலம் கோறளை தெற்கு (கிரான்) கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச சபைகள் புதிதாக அமைக்கப்படவேண்டும். கோறளைபற்று தமிழ் பிரதேச செயலக பிரிவை நகரசபையாக மாற்றுமாறும் அடியேன் அண்மையில் அமைச்சரின் கவனத்திற்கு நேரடியாகவும் பாராளுமன்ற உரையின் மூலமும் விடுத்த வேண்டு கோளின் அடிப்படையில் அமைச்சர் உத்தரவு வழங்கி இவ் பிரதேச சபை, நகர சபை நடவடிக்கைகளுக்காக குழு நியமிக்கப்பட்டுள்ளது

இதேவேளை ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச சபையின் ஒரு பகுதியினை நகர சபையாக மாற்றியும் பதுளை வீதியில் அமைந்துள்ள கிராமங்களை ஒரு பிரதேச சபையாகவும் மாற்றவேண்டும்.

மண்முனை தென்எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச சபையினை ஒரு பிரதேச சபை, ஒரு நகர சபை அல்லது இரு பிரதேச சபையாக மாற்றுவதற்கும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஒரு பகுதியை பிரதேச சபையாகவும் ஏனைய பகுதியை மாநகர சபையாகவும் உருவாக்குவதற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

இவ்விடயங்களுக்கு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சு ஆதரவு வழங்கி உறுதி வழங்கியுள்ளதால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலுக்கு முன் இவைகளை நடைமுறைபடுத்த அமைச்சு நடவடிக்கை எடுக்கும் என தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.