முகப்பு News India திமுக தலைவராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்பு

திமுக தலைவராக மு.க ஸ்டாலின் இன்று பதவியேற்பு

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறும் பொதுக் குழு கூட்டத்தில் மு.க ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்க உள்ளார்

திமுக தலைவர் கலைஞரின் மறைவையடுத்து, தலைவர் பதவியை செயல் தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பலமாக எழுந்தது. இதனையடுத்து 28ஆம் தேதி திமுக பொதுக் குழு கூட்டம் நடைபெறும் எனவும், அன்றைய தினம் தலைவர் – பொருளாளர் தேர்தல் நடைபெறும் என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.

இந்தப் பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று மாலை 5 மணிக்கு வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலினும் துரைமுருகனும் தேர்வு செய்யப்படுவது உறுதியாகியது.

வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டதற்குப் பின்னர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “திமுகவின் தலைவர், பொருளாளர் பதவிக்கு நேற்று காலை 10 மணி தொடங்கி மாலை 4 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினுடைய பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் மனு தாக்கல் செய்யப்பட்டன. பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் பொதுச் செயலாளரிடத்தில் சமர்ப்பிக்கப்படும்.

நாளை காலை (இன்று) 9 மணிக்குத் தொடங்கவுள்ள பொதுக்குழு கூட்டத்தில் முதலில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். பின்னர் தணிக்கை குழு அறிக்கை தாக்கல், அதன் பிறகு தலைவர், பொருளாளர் தேர்தல் முடிவுகளை பொதுச் செயலாளர் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com