300 பந்துகளில் சதம் சந்திமால் உலக சாதனை

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் சதத்தை பூர்த்திசெய்துள்ளார்.

 தினேஷ் சந்திமால்

சாரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் இலங்கை , பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 244 பந்துகளில் 138 பெற்றே மேற்படி சதத்தை சந்திமால் பெற்றுள்ளார். இதுவரிக் எட்டாவது டெஸ்ட் கிரிக்கெட் சதமாகும்.

300 பந்துகளில் சந்திமால் சதமடித்துள்ளதால் உலகில் அதிக பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். போட்டியின் இரண்டாவது நாளான இன்று இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 338 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

துப்பாட்டத்தில் தினேஷ் சந்திமால் 300 பந்துகளில் 10 பவுண்ரிகள், 1 சிக்ஸர் அடங்களாக 138 ஓட்டங்களையும், டி. சில்வா மற்றும் டிக்வெல்ல ஆகியோர் தலா 34 ஓட்டங்கள் என்ற அடிப்படையிலும் ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

தினேஷ் சந்திமால்

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், ஹசன் மிராஸ் 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபி ரஹமான், சஹிப், சமசிஸ் ரோய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றிக்கொண்டனர்.

பதலுக்கு தனது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி 57 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 198 ஓட்டங்களை எடுத்து துடுப்பெடுத்தாடி வருகிறது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் சர்கார் 61 ஓட்டங்களையும், தமிம் இக்பால் 49 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]