தினகரனை சந்தித்து பேசிய சுமந்திரன்

தினகரன் சுமந்திரன்

சென்னை ஆர்.கே நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு, வெற்றிப் பெற்றுள்ள தினகரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேசியுள்ளார்.

இதன்போது, இலங்கைத் தமிழர்களின் தற்போதைய நிலை குறித்து தினகரன், சுமந்திரனிடம் கேட்டறிந்துள்ளார்.

கன்னியாகுமரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த நத்தார் விழாவில் கலந்து கொண்ட போதே, தினகரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பு நடந்தது.

இந்த விழாவில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பங்கேற்கவிருந்தார். அவர் சுகவீனமடைந்திருந்ததால், அவரது பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்த நத்தார் விழாவில் பங்கேற்றிருந்தார்.

பொதுக் கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், சுமார் 20 நிமிடங்கள் இருவரும் சந்தித்து கலந்துரையாடியதாகவும் போருக்குப் பிந்திய சூழலில் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்கள் எப்படி உள்ளனர் என்று தினகரன் கேட்டறிந்து கொண்டதாகவும், இந்திய ஊடகங்களுக்கு சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]