தித்திக்கும் தீப திருநாள் நல் வாழ்த்துக்கள்

”இல்ல இருள் அகற்ற தீப ஒளி ஏற்றுவோம்
உள்ள இருள் அகற்ற நல் வழிகாட்டுவோம்”

என யுனிவர்சல் தமிழ் தனது வாசகர்களுக்கு இனிய தீப திருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

தீபாவளி என்பது தீபங்களின் திருநாளாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

தீபாவளி ஐப்பசி மாத திரயோதசி, சதுர்த்தசி, அமாவாசை மற்றும் அதற்கடுத்த சுக்கிலப்பிரதமை, பௌ-பீஜ் ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது.

சில வருடங்களில் ஐப்பசி அமாவாசை முன்தினம் நக சதுர்த்தசி அன்று கொண்டாடுகிறார்கள். பெரும்பாலான வருடங்களில் தீபாவளி ஐப்பசி அமாவாசைநாளன்று வரும். கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15-ம்திகதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.

தீபாவளி அன்று, நீராடியபின் புத்தாடை அணிந்து சுவாமி முன் கோலமிட்டு மஞ்சள் தூள், வெற்றிலை,பாக்கு,பழம், தேங்காய், பூ, புத்தாடை, பட்டாசு, பல காரங்கள் போன்றவற்றை வைத்து, தெரிந்த சுலோகங்களைச் சொல்லி( விஷ்ணு லட்சுமி, சிவ பார்வதி, குபேரன் துதிகளைச் சொல்வது சிறப்பு) தூப தீபம் காட்டி வணங்குதல் வேண்டும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]