திகன வன்முறை 24 பேருக்கு விளக்கமறியல்

திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் நிலவிய அசாதாரண சூழ்நிலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 24 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை, மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மறு அறிவித்தல் வரை இப்பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.​

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]