திகன பகுதியில் கலவரத்தின்போது முஸ்லிம் இளைஞன் பரிதாப பலி!!

கண்டி திகன பகுதியில் நேற்று முழுவதும் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதலில் முஸ்லிம்களின் வீடுகள் பள்ளிகள் தாக்கப்பட்ட நேரத்தில் தன் தாய், தந்தை மற்றும் சகோதரனை காப்பாற்றி விட்டு தன்னால் தப்பிக்க முடியாத நிலையில் வீட்டுக்குள் சிக்கிய முஸ்லிம் இளைஞன் தீயில் கருகி உயிரிழந்துள்ளார்.

தனது மகன் ஏதும் காயங்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கலாம் என்று நினைத்த பெற்றோர் எரிக்கப்பட்ட வீட்டின் நிலையை பார்த்து விட்டு வைத்தியசாலைக்கு மகனை தேடச் செல்லவிருந்த நிலையில் வீட்டுக்குள் நுழைந்து பார்க்கும் போது மகன் தீயில் கருகி உயிரிழந்துள்ளதை பார்த்து தந்தை தாங்க முடியாத கவலையில் கதறி அழுதுள்ளார்.

திகன பள்ளிக்கு அருகில் இருக்கும் ஷம்சுதீன் என்பவரின் மகனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒரு சிங்கள இளைஞனை 4 முஸ்லிம்கள் கொலை செய்தார்கள் என்பதற்காக சட்டப்படி அவர்களை தண்டிக்காமல் முழு ஊரையும் எரித்த சிங்கள சமுதாயம் தற்போது ஒரு முஸ்லிம் இளைஞனை கொலை செய்துள்ளார்கள்? இதற்கு யார் பதிலளிப்பார்? இதற்கு என்ன தீர்வு? என மக்கள் தமது கவலையை வெளியிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]