திகன நகரில் கலவரம்: ஊரடங்கு உத்தரவு அமலில்!! (படங்கள்)

கடந்த வாரம் தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஏற்பட்ட
கைகலப்பில் மெதமானுவர பகுதியை சேர்ந்த M.G.குமாரசிங்க (41) என்பவர் படுகாயமடைந்துகண்டி வைத்தியசாலௌயில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு வாரத்தின் பின்னர் மரணமடைந்த சம்பவத்தை அடுத்தே அப்பகுதியில் அசம்பாவிதங்கள் இடம்பெற்று வருகின்றன.

Photo credits Rohan

நேற்று நள்ளிரவு (4/3/18) மெரகாமுல்ல என்ற இடத்திலுள்ள ஒரு மொத்த விற்பனை
நிலையமும் உடிஸ்பத்துவ பகுதியில் ஒரு கடையும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதோடு
அம்பாரையில் இருந்து கண்டி நோக்கி வந்த வேன் ஒன்று வழிமறித்து தாக்கப்பட்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது .

இந்நிலையில் இன்று சம்பவத்தில் இறந்தவரின் பூதவுடல் தகனம் செய்யப்படும் போது ஏதும் அசம்பாவிதங்கள் ஏற்படலாம் என்ற நிலையில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்த பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில் உடன் அமுலாகும் வகையில் நிர்வாக மாவட்டத்தில் நாளை காலை 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படும் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]