தாழிறங்கிய வீதியும், 4 வீடுகளும் காசல்ரீ நீர்தேக்கத்திற்குள் மூழ்கியது- வீடியோ உள்ளே

பொகவந்தலாவை – ஹட்டன் பிரதான வீதியின் ஊடாக போக்குவரத்து மேற்கொள்ள முடியாத அளவு வீதி முழுமையாக தாழிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி, நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் தாழிறக்கம் காரணமாக கடந்த சனிக்கிழமை மூடப்பட்டது.

இந்தநிலையில், தொடர்ச்சியான மழை காரணமாக, வீதி இன்று காலை பாதையின் ஒரு பகுதி சரிவடைந்துள்ளதுடன் 4 வீடுகளும் அள்ளுண்டதாக தெரியவருகின்றது.

மறு அறிவித்தல் வரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளுக்கு காவற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால், அந்த வீதியை பயன்படுத்தும், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, குறித்த பகுதியில் வசித்த ஆறு குடும்பங்களை சேர்ந்த 23 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]