தார் டிரம் வெடித்து சிதறியதில் 8 கார்கள் சேதம்- வீடியோ உள்ளே!!

கோவை 100 அடி சாலையில் புதிதாக கட்டப்படும் மேம்பாலத்துக்காக வைக்கப்பட்டிருந்த தார் ட்ரம் மீது லாரி மோதியதில், தார் டிரம் வெடித்து சிதறி அருகில் இருந்த வாகனங்கள் சேதம் அடைந்துள்ளது.

கோவை 100 அடி சாலையில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அங்கு தற்போது சாலை அமைக்கும் நடைபெற்று வருகிறது. அதற்காக பெரிய பெரிய ட்ரம்களின் மூலம் உறைய வைக்கப்பட்ட தார் கொண்டுவரப்பட்டு மேம்பாலத்தின் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், திங்கள் கிழமை (இன்று) மதியம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான லாரி மேம்பாலத்தில் பின் (reverse) பக்கமாக சென்று கொண்டிருந்த போது, ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த ட்ரம் மீது மோதியது.

இதில் தார் நிரப்பப்பட்டிருந்த ட்ரம் டமால் என்ற சத்தத்துடன் வெடித்தது. மேலும் ட்ரம்மில் இருந்து தார் சிதறி மேம்பாலத்தின் கீழே சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது விழுந்தது.

இந்த விபத்தில் 8 கார்கள் மற்றும் ஒரு சரக்கு ஏற்றிச் செல்லும் ஆட்டோவின் மீது தார் விழுந்து சேதம் அடைந்தது. இதில் ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவரின் மீதும் தார் சிதறியது.

இதனால் அப்பகுதியில் மிகப்பெரிய அளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து காரின் உரிமையாளர்கள் பாலம் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், அலட்சியமாக பணியாற்றிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது காட்டூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க காரின் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]