முகப்பு Cinema தாய்லாந்து சென்றுள்ள நடிகர் கணேஷ் , நிஷா- அழகிய புகைப்படங்கள் உள்ளே

தாய்லாந்து சென்றுள்ள நடிகர் கணேஷ் , நிஷா- அழகிய புகைப்படங்கள் உள்ளே

தாய்லாந்து சென்றுள்ள நடிகர் கணேஷ் வெங்கட்ராமன், இதை மிஸ் செய்துவிடாதீர்கள் என ட்வீட் செய்துள்ளார்.

பிக்பாஸ் முதல் சீசனில் நன் மதிப்பை பெற்றவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். மும்பையில் பிறந்த இவர் தெலுங்கில் நடித்திருந்தாலும், ராதா மோகன் இயக்கிய அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன், ஜெயம் ரவியின் தனி ஒருவன் போன்ற படங்கள் நல்ல அடையாளத்தைக் கொடுத்தன. இப்போது அரவிந்த் சாமியுடன் வணங்காமுடி என்ற படத்திலும், மைஸ்டோரி என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

இப்போது ஒரு விளம்பர ஷூட்டிங்குக்காக தாய்லாந்து சென்றுள்ள கணேஷ், தாய் உணவான கிரில்டு டைகர் பிரான் பிளேட்டுடன் போட்டோ எடுத்து தாய்லாந்து வந்தால் இதை மிஸ் பண்ணிடாதீங்க என்று ட்வீட் செய்துள்ளார்.

“பிக்பாஸ்ல முட்டைக்காக ஒத்தைக்கால்ல நின்னாரு… தாய்லாந்து போயும் சாப்புடறதுலேயே குறியா இருக்காரே மனுஷன்…” அப்படின்னு நினைக்காதீங்க!

எப்போதுமே சமூக அக்கறையோட பல விஷயங்களில் ஈடுபட்டு வருபவர் கணேஷ் வெங்கட்ராம்.ஜுலை 29 ஆம் தேதி திருநெல்வேலியில் நடக்க உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாமுக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார்.

மனசையும் உடலையும் சுத்தமாக வைத்திருக்கும் நல்ல மனிதர் கணேஷ் வெங்கட்ராம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com