தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 23 பேர் பலி

தாய்லாந்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 23 பேர் பலியாகினர்.

வெள்ளப்பெருக்கினால் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

தாய்லாந்தின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.

இதனால் சுமார் 10 மாகாணங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

7 லட்சத்து 21ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடும் மழை காரணமாக பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.