தாயை விவாகரத்து செய்து மகளை திருமணம் செய்த தந்தை- இப்படியும் ஒரு தந்தையா??

பாகிஸ்தானில் ஹரிபூர் நகரை சேர்ந்த வாரீஸ் ஷா என்பவர் அண்மையில் தனது 40 வயதான மனைவியை விவாகரத்து செய்துவிட்டு மனைவிக்கு முதல் கணவருடன் பிறந்த மகளை திருமணம் செய்து கொண்டுள்ளார்

இதை எதிர்த்த வாரீஸின் மனைவி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அங்கு தாயும், மகளும் சண்டை போட்டு கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து வாரீஸின் வளர்ப்பு மகள் தந்தையை கணவனாக ஏற்று அவருடன் செல்லலாம் என நீதிமன்றம் கூறியது.

ஆனால் இதை எதிர்த்த வாரீஸின் முதல் மனைவி இது சட்டவிரோதமானது என வாதிட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே வாரீஸின் தந்தை வாரீஸ் வளர்ப்பு மகள் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்கள்.

அதே சமயத்தில் இந்த திருமணத்தை நடத்தி வைத்த பதிவாளர் அலி ஹசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]