தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன்!

தனது தாயை கழுத்தை அறுத்து கொலை செய்த மகனின் செயல் இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை நகரை சேர்ந்தவர் யோகேஷ் ஷினோய் (52). இவரின் தாய் லலிதா (80) இவரின் மனைவி யோகேஷின். இவர்கள் இருவரும் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.  இதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார்.

யோகேஷின் தாயின் மருந்துவ செலவுகள் அதிகம். ஆனால் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வந்த யோகேஷால் இதை சமாளிக்க முடியவில்லை. இது சம்மந்தமாக தாய்க்கும், மகனுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு இருவரும் அதிக சத்தத்துடன் சண்டை போட்டனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு  தகவல் கொடுத்துள்ளனர்.

ஆனால் பொலிசார் வருவதற்குள், தலையணையால் லலிதாவின் முகத்தை அழுத்தி, பின் கத்தியால் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அங்கு பொலிசார் வந்த நிலையில் யோகேஷை கைது செய்து, லலிதாவின் சடலத்தை கைப்பற்றினார்கள். ஆத்திரத்தில் இவ்வாறு செய்துவிட்டேன் என யோகேஷ் பொலிசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]