தாயும் மகளும் படுகொலை

மஹியங்கனை பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மாபாகடவௌ பகுதியில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்தாக பொலிஸார் கூறினர்.

மாபாகடவௌ பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான பெண்ணும், அவரது 40 வயதான மகளுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின மகன் வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.