தாயும் சகோதரர்களும் உயிரிழந்த போதும் 9ஏ பெறுபேறு பெற்று மாணவன் சாதனை!!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் இராசேந்திரம் பிரதீபன் என்னும் மாணவன் கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் 9ஏ பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது எனது தாயும் மூன்று சகோதரர்களும் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் என் மனதை பெரிதும் பாதித்திருந்த நிலையில் என் தந்தையின் அரவணைப்பினாலும் அதிக ஊக்கத்தினாலும் இன்று 9ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளேன்.

தொடர்ந்து கணிதத்துறையில் கல்வியை கற்று ஒரு விமானியாக ஆவதே என் எதிர்கால இலட்சியம் என்று தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மார்கழி மாதம் நடைபெற்ற கல்வி பொதுத்தராதர சாதராணதரப் பரீட்சையில் முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தில் தோற்றிய 12 மாணவர்களில் இரண்டு மாணவர்கள் 9ஏ பெறுபேறுகளை பெற்றுள்ளதாகவும்.

அத்துடன் 8 மாணவர்கள் தொடர்ந்து உயர்தரத்தில் கற்பதற்கு தகுதி பெற்று, முள்ளிவாய்க்கால் மேற்கு கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்திற்கு பெருமை சேர்த்துள்ளதாக குறித்த பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]