தாயின் நிர்வாண போட்டோவை காதலனுக்கு அனுப்பிய காதலி- பின்னர் நடந்த விபரீதம்

சென்னையை அடுத்த திருநின்றவூரை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். 25 வயதான இவர் அப்பகுதியில் உள்ள ஜெயா கல்லூரியில் 2012ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பிபிஏ படித்துள்ளார். அப்போது உடன் படிக்கும் மாணவி ஒருவரை ஜெயப்பிரகாஷ் காதலித்துள்ளார். காதலியுடன் பல இடங்களில் ஜெயப்பிரகாஷ் ஊர் சுற்றிய போது அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளார். காதலியுடன் உல்லாசமாக இருக்கும்போது அதனை ஜெயப்பிரகாஷ் வீடியோவாகவும் பதிவு செய்து வைத்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ஜெயப்பிரகாசுக்கு கல்லூரி மாணவிக்கும் இடையிலான காதல் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜெயப்பிரகாஷ் தான் எடுத்து வைத்த ஆபாச படங்களை வைத்து அந்த மாணவியை தொடர்ந்து மிரட்டி தன்னுடைய இச்சைகளை தீர்த்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில் உன்னுடைய ஆபாச படத்தை வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் உன்னுடைய தாயின் ஆபாச படத்தை அதாவது நிர்வாண படத்தை அனுப்பி வைக்க வேண்டும் என்று ஜெயப்பிரகாஷ் மாணவியை மிரட்டியுள்ளான்.

வேறு வழியில்லாமல் மாணவியும் தன்னுடைய தாய் குளிக்கும்போது தெரியாமல் வீடியோ பதிவு செய்து அதனை ஜெயப்பிரகாசுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதன்பிறகு ஜெயப்பிரகாஷ் ஓயவில்லை. இப்போது உன்னுடைய ஆபாச படம் மட்டுமல்ல உன்னுடைய தாயின் ஆபாச படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்று கூறி தொடர்ந்து மாணவியை மிரட்டி உடலுறவு கொண்டு வந்துள்ளார். இதனால் பயந்துபோன அந்த மாணவி தன்னுடைய தாயிடம் நடந்ததை கூறியுள்ளார்.

அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயப்பிரகாசை கைது செய்துள்ளனர். தன்னுடைய ஆபாச படங்களை மட்டுமல்லாமல் தன்னுடைய தாயின் ஆபாச படத்தையும் அனுப்பியதால் மாணவிக்கு நேர்ந்த விபரீதம் வேறு யாருக்கும் நேரக்கூடாது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]