தாயின் இதயத்தை சட்டினியில் தொட்டு சாப்பிட்ட கொடூர மகன்- மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சி சம்பவம்

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் Mahawala Vasant பகுதியைச் சேர்ந்தவன் Sunil Kuchakurni(35). இவன் சம்பவ தினத்தன்று தனது தாயாரான Yelava(65)-வை அடித்து கொலை செய்து அவரது இதயத்தை சட்டினியில் தொட்டு சாப்பிட்டதாக செய்திகள் வெளியானது.இந்நிலையில் Sunil Kuchakurni -ஐ பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.Sunil Kuchakurni-க்கு திருமணம் முடிந்து மூன்று குழந்தைகள் மற்றும் மனைவி உள்ளனர் எனவும் அவர்கள் மும்பையில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவ தினத்தன்று Sunil Kuchakurni தனது தாயாரிடம் சென்று மது அருந்துவதற்காக பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தராததால், ஆத்திரத்தில் Sunil Kuchakurni வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரை கொடூரமான முறையில் கொலை செய்து அவரது இதயத்தை வெளியில் எடுத்து வைத்துள்ளார்.தாயை கொலை செய்த பின் அவர் இரத்ததுடன் வெளியில் வந்தால், அங்கிருந்த மக்கள் பொலிசாருக்கு தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பொலிசார் தெரிவிக்கையில், மது வாங்குவதற்கு பணம் கொடுக்காத காரணத்தினால், அவர் கொலை செய்துள்ளார்.

உடல் பிரேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது. அது தொடர்பான உறுதியான தகவல் வந்த பின்னர் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடந்துவருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]