தாயின் அஜாக்கிரதையால் 2வயதுடைய பச்சிளம் குழந்தை பரிதாப பலி

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இவருடைய மனைவி சூர்யாவிற்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சூர்யா, தனது குழந்தைகளுடன் பிராட்வே சிங்கர் தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

சூர்யாவின் சித்தி மகேஸ்வரி என்பவர் அப்பகுதியில் நடைபாதையோரம் டிபன் கடை நடத்தி வருகிறார். நேற்று காலை சூர்யாவின் 2-வயது நிரம்பிய பெண்குழந்தை டிபன் கடை அருகே விளையாடி கொண்டிருந்துள்ளார்.

அப்போது மதியம் உணவு விற்பனைக்காக டிபன் கடையில் பெரிய பாத்திரத்தில் சாம்பார் தயாரித்து கீழே வைத்து இருந்தனர். அங்கு விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை கொதிக்கும் சாம்பார் பாத்திரத்தில் தவறி விழுந்துவிட்டது.

வலியால் துடித்த குழந்தையை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]