தாயிடம் தவறாக நடந்து கொண்ட நண்பனின் தலையை வெட்டிய மகன்- நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே

இந்தியா – கர்நாடக மாநிலத்தில் தனது தாயிடம் தவறாக நடந்து கொண்ட நண்பனின் தலையை அவரது மகன் வெட்டி குறித்த தலையை அருகில் உள்ள காவற்துறைக்கு எடுத்த சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள மலவள்ளி கிராமத்தில் பெற்ற தாயிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடந்ததாகவும் இதையடுத்து அந்த இளைஞனின் தலையை அவரது மகன் வெட்டி எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அந்த தலையை கையில் எடுத்துக் கொண்டு குறித்த நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கொல்லப்பட்டவரின் அடையாளம் காணும் பணிகள் நடந்து வருகிறது என்றும், இவர்களுக்குள் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததா? அல்லது நட்பு ரீதியாக பழகி வந்து பின்னர் பிரச்சனை ஏற்பட்டதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருவதாக கர்நாடகா காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கர்நாடகா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தொந்தரவு கொடுத்த இளைஞரின் தலையை வெட்டி கையில் எடுத்து வந்த சம்பவம் காணொளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]