தாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி: மஹிந்த ராஜபக்ஷ

தாம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், ‘எதிர்வரும் 2019ஆம் ஆண்டுடன் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியாவிற்கான எனது விஜயம் இந்திய அரசாங்கத்துடன் பல காலமாக நீடித்திருந்த இறுக்கமான உறவை சுமூகமாக்குவதற்கான ஆரம்பமாக அமைந்துள்ளது.

அத்தோடு, தேர்தல் போன்ற ஒரு நாட்டின் உள்ளூர் விவகாரங்களில் வேறு நாடுகள் தலையிட கூடாது. எனது கருத்து இந்தியாவிற்கு மட்டுமல்ல, அனைத்து நாடுகளுக்கும் பொதுவான கருத்தாகும்.

ஆனால், நாம் கடந்த காலத்தை மறந்து முன்னோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நாம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவுடனான முதலீடு மற்றும் தொடர்பாடல் ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கவுள்ளேன் என்றும்’ அவர் கூறினார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]