தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாத போது பெண்கள் சொல்லும் பொய்கள்…

தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லாத போது பெண்கள் சொல்லும் பொய்கள்…

வாழ்வின் ஒரு அங்கம் தான் தாம்பத்தியம். பெரும்பாலும் பெண்கள் கணவரிடம் அன்பு மற்றும் பாசத்தையே எதிர்பார்ப்பார்கள். பகலில் எந்த நெருக்கமும் இல்லாமல் இருந்து விட்டு இரவில் மட்டும் தேடும் கணவனை எந்த மனைவியும் விரும்புவதில்லை.

அவர்கள் தாம்பத்தியத்திற்கு ஒத்துழைத்தாலும், அதில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது. என்ன செய்தாலும் எந்த உணர்வும் இன்றி இருப்பார்கள்.

தாம்பத்தியத்தில் விருப்பம்

பொதுவாக முப்பத்தைந்து மற்றும் நாற்பது வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்திருக்கும்.

இங்கு மனைவிக்கு தாம்பத்தியத்தில் விருப்பம் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?…

அடிக்கடி தலைவலி, வயிற்றுவலி போன்ற வெளியே தெரியாத காரணங்கள் சொல்லி தவிர்க்க பார்ப்பார்கள். தூக்கம் வருகிறது, சோர்வாக இருக்கிறது, குழந்தைகள் தூங்கவில்லை, காலை அலுவலகம் செல்ல வேண்டும் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள்.

தாம்பத்தியத்தில் விருப்பம்

நேரடியாக உறவு பிடிக்கவில்லை என்று சொல்ல தயங்குவார்கள். அப்படி சொல்லிவிட்டால் கணவரின் வெறுப்புக்கு ஆளாகிவிடுவோமா என்கிற பய உணர்வு இருக்கும். மனைவி உறவின் மேல் விருப்பம் இல்லை என்பது போல் காட்டிக்கொண்டால், கணவருக்கு அளவிற்கு அதிகமாக கோபம் ஏற்படும்.

மனைவியை எல்லையின்றி நேசிக்கும் கணவரும் கூட, மனைவி இதற்கு மறுப்பு தெரிவித்தால் கட்டுக்கடங்காத கோபத்தை காட்டுவார்கள். ஏன் எதற்காக மறுக்கிறாள் என்பதை பொறுமையாக யோசிக்க மாட்டார்கள்.தாம்பத்தியத்தில் விருப்பம்

அந்த தருணத்தில் தாம்பத்தியத்தை பற்றிய உந்துதல் மட்டுமே இருக்கும்.
அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்றால், காரணமில்லாமல் எரிந்து விழுவது, திட்டுவது அவர்களை நிராகரிப்பது போன்றவற்றை செய்வார்கள். சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், மனைவியின் நடத்தையை சந்தேகிப்பார்கள்.

இதனால் கணவன் மீது இருக்கும் அன்பும், அந்நியோன்னியமும் குறையுமே தவிர அவர்களிடம் கட்டாயம் மாற்றத்தை காண முடியாது. சந்தேகம் என்பது உங்கள் குடும்பத்தையே அழித்து குழந்தைகளின் வாழ்வை கேள்விக் குறியாக்கிவிடும்.

தாம்பத்தியத்தில் விருப்பம்

இது போன்ற விஷயங்களை பொறுமையாகவும், அமைதியாகவும் கையாள்வதே நன்மையை தரும். தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது ஆண்களை விட பெண்களுக்கே அதிக இன்பம் கிடைக்கும்.

எனவே, பெண்கள் ஏன், எதனால் தவிர்க்கிறார்கள் என்பதை அறிய வேண்டியது கணவரின் கடமை. இதுவே, சிறந்த இல்லற வாழ்விற்கு வழிவகுக்கும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]