தாமரைப் பூப்பறிக்கச் சென்றவர்களின் தோணி கவிழ்ந்ததில் 4 சிறுவர்கள் உட்பட ஐவர் பலி -முழுவிபரம்

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவு பெரியகுளத்திற்கு தாமரைப் பூப்பறிக்கச் சென்றவர்களின் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 4 சிறுவர்கள் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள குளத்திற்குச் சென்று பொங்கி வழிபட்டு பொழுதைக் கழிக்கச் சென்றவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகங் கொடுத்துள்ளனர்.

நிலாவெளி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான சுரேஸ் கேசிக்ராஜ் (வயது 9) சுரேஸ் யுதேஸன் (வயது 7), சுகந்தன் பிரணவி (வயது 7), தங்கத்துரை சங்கவி (வயது 9) மற்றும் படகை ஓட்டிச் சென்ற தருமலிங்கம் தங்கத்துரை (வயது 32) ஆகியோரே நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.

சேறும் சகதியுமான அந்தக் குளத்திலுள்ள தாமரைப் பூக்களை இவர்கள் பறித்துக் கொண்டிருந்த சமயமே தோணி கவிழ்ந்துள்ளது.

விரைந்து செயற்பட்ட அக்கம்பக்கத்திலிருந்தவர்களும் கடற்படையினரும் உதவிக்கு விரைந்தவர்களுமாக நீரில் மூழ்கியவர்களைக் காப்பாற்ற முயற்சித்தபோதும் அது பயனயளிக்கவில்லை என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலங்கள் உடற் கூறாய்வுக்காக நிலாவெளி வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

நீரில் மூழ்கி மரணித்த ஒரு சிறுமியின் தாய் நிலாவெளி வைத்தியசாலையில் தாதியாகப் பணியாற்றுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]