தானா சேர்ந்த கூட்டம் ஃபர்ஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளில்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் நடிகர் சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்’ மிக பிரமாண்டமாக படபிடிப்பு நடந்துகொண்டிருக்கின்றது.

இதுவரை படத்தை பற்றி பெரிய அளவில் எந்த செய்தியையும் வெளியிடாமல் இருக்கின்றனர் படக்குழுவினர்.

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சூர்யா பிறந்தநாளான ஜுலை 23-ம் தேதி வெளியாக இருப்பதாக விக்னேஷ் சிவன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதனால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றார்கள் சூர்யாவின் ரசிகர்கள். வருகின்ற ஜுலை 23-ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவருடைய ரசிகர்கள் மகிழும் வண்ணம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதாக படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]