முகப்பு News தாதியர் அறையினுள் புகுந்த மனநோயாளியால் பரபரப்பு

தாதியர் அறையினுள் புகுந்த மனநோயாளியால் பரபரப்பு

மனநோயாளி ஒருவர் தாதியர் அறையினுள் புகுந்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவமானது, தெல்லிப்பளை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனநோயாளி ஒருவர், நேற்று தாதியர் அறையினுள் நுழைந்துள்ளார். இதன்போது குறித்த அறையில் தாதி ஒருவர் இருந்த நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மனநோய் காரணமாக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளியே தாதியர் அறையினுள் திடீரெனப் பிரவேசித்து அறையின் கதவினை உட்பக்கமாக தாள் இட்டுக்கொண்டுள்ளார்.

இதன் காரணமாக அச்சம் அடைந்த தாதி குரல் எழுப்பியதை தொடர்ந்து, வெளியில் இருந்த உத்தியோகத்தர்கள் அறையின் கதவினை உடைத்து உட் சென்றுள்ளனர்.

அறையினுள் இருந்த தாதி பத்திரமாக மீட்கப்பட்டதோடு, தாதியர்கள் மற்றும் ஏனையோர் பெரும் பதற்றமடைந்தனர்.

மேலும் அண்மையில மதுவிற்கு அடிமையான நோயாளி ஒருவர் பெண்கள் விடுதிக்குள் உள் நுழைந்து பெண்நோயாளியை பிடித்து கொண்டார். நீண்ட போராட்டத்தின் பின்னர் நோயாளி பத்திரமாக மீட்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com