தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு

கொட்டகலை பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இன்றைய தினம் காலை முதல் 07 மணிமுதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தாதியர்களின் இடமாற்றம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை அடுத்து, நுவரெலியா மாவட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அவசர சிகிச்சை நடவடிக்கைகளுக்காக 6 தாதியர்களை பணியில் ஈடுபடுத்த தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும், தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]