தாசரி நாராயண ராவ் மரணம்; தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்…

நேற்று மாலை ஹைதராபாதில் காலமான பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குனர் தாசரி நாராயண ராவ்க்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தாசரி நாராயண

” இயக்குனர், கதாசிரியர், பாடலாசிரியர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக விளங்கிய திரு. தாசரி நாராயண ராவ் அவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை மரணமடைந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை கொள்கிறோம். தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் 150க்கும் மேல் படங்களை இயக்கியதோடு 250க்கும் மேல் படங்களுக்கு கதை திரைக்கதை வசனங்களும் எழதி சாதனை புரிந்துள்ளார்.

மேலும் மத்திய மாநில அரசுகள் அவருக்கு விருதுகள் பல வழங்கி கௌரவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் மத்திய அமைச்சராக நாட்டுக்கு சேவை புரிந்துள்ளார். தெலுங்கு சினிமா உலகின் வழிகாட்டியாக திகழ்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத்துடன் என்றும் நட்பை பராமரித்து வந்த அவரது மறைவு தென்னிந்திய சினிமா உலகிற்க்கே ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.  அவரது பிரிவால் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் திரை சமூகத்தின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது ”

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]