தவான் வானவேடிக்கை : முதல் நாளே இந்தியா இமாலய ஓட்ட எண்ணிக்கை தொட்டது

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி இன்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 399 ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமானது. முதலாவது போட்டி காலியில் நடைபெறுகிறது. நாணயசுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்து துடுப்பெடுத்தாடிவரும் இந்நிய அணி இன்றை ஆட்டநேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 399 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.

உலகக்கிண்ணத் தொடரின் போது இலங்கை இந்திய அணிகள் சந்தித்தப் போட்டியில் இலங்கை இந்தியாவை அதிரடியாக வீழ்த்தியிருந்தது. அதற்கு பழித்தீர்க்கும் வகையில் இந்தியா இலங்கை தொடரில் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று சர்வதேச கிரிக்கெட் ஆர்வளர்கள் இத்தொடர் குறித்து முன்னதாக கூறியிருந்தனர்.

சொந்த மண்ணில் வீழ்ந்துவிட கூடாது என்று இலங்கை அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்று ஆரூடம் கூறப்படுகிறது. காரணம் புதிய தலைவர் தினேஸ் சந்திமால் இந்தப் போட்டிக்குத் தலைமைத்தாங்குகின்றார்.

இன்றைய துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் துடுப்பாட்டம் கூறப்பட்டது போன்று ஆக்ரோசமாகவே இருந்தது. ரி20 கிரிக்கெட்டை போன்று ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான சிக்கார் தவான் வானவேடிக்கையை நிகழ்த்தியிருந்தார். இவரின் பவுண்டரி மலைகளால் இந்திய ரசிகர்கள் பூரித்து போயிருந்தனர். 168 பந்துகளை சந்தித்த தவான் 190 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து முதலாவது நாளே இந்தியா இமாலய ஓட்ட இலக்கை தொட கைக்கொடுத்தார். இவர் மொத்தமாக 31 பவுண்டரிகளை விளாசியிருந்தார்.

தவான் வானவேடிக்கை

மறுபுறத்தில் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக வாய்ப்பளிக்கப்பட்ட அபினவ் முகுந்த் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார். பின்னர் தவானுடன் கைக்கோர்த்த புஜாரா ஆட்டநேர முடிவின் போது ஆட்டமிதுக்காது 247 பந்துகளை சந்தித்து 144 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இதேவேளை, கோஹ்லி 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துடன், ரஹானே 39 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.

தவான் வானவேடிக்கை

பந்துவீச்சில் சிறப்பாக பந்துவீசியிருந்த நுவான் பிரதீப்பே பறிபோன மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். நாளையதினம் போட்டியின் இரண்டாம் நாளாகும். 10 ஓட்டங்களால் இன்று இரட்டை சதம் பெறும் வாய்ப்பை இழந்திருந்தார் தவான். களத்தில் நிதானமாக ஆடக்கூடிய புஜாராவுக்கு நாளை இரட்டை சதமொன்றை பெறக் கூடிய வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் ஆர்வளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தவான் வானவேடிக்கை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]