இலங்கையை சேர்த்த பணிப்பெண் ஒருவரால் பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளாகிய சவுதி அரேபியாவின் தொழிலதிபரை அடுத்து, இனிமேல் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் மீது 5-20 வருட சிறைதண்டனை அல்லது ஒரு மில்லியன் இழப்பீட்டுத் தொகை தண்டனையாக அறவிடப்படும் என, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) இன்று தெரிவித்துள்ளது.

குறித்த தொழிலதிபர் தனது சிறுநீரகத்தை தானம் செய்யும்படி கட்டாயப்படுத்தியதாக பொய் புகார் அளித்த பணிப்பெண் கைது செய்யப்பட்டதை தொடர்ந்தே இச்சட்டம் அமுலுக்கு வந்துள்ளது