தளபதி – 64 படத்தின் இசையமைப்பாளர் இவரா?

தற்போது தளபதி விஜய் அட்லீ இயக்கும் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விளையாட்டை மையமாக கொண்ட கதை. இந்த படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்த நிலையில் விஜய்யின் 64வது படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. விஜய் படத்திற்கு இரண்டாவது முறை மீண்டும் அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

இந்த படத்தை மோகன்ராஜா இயக்கவுள்ள நிலையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார் என ஒரு தகவல் கசிந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]