தளபதி-63 பட இயக்குனர் அட்லீயை மரணத்திற்கு தயாரா? என மிரட்டிய நபர் – ப்ரியா என்ன செய்தார் என பாருங்கள்

விஜய்-அட்லீ கூட்டணி தெறி, மெர்சலை என ஹிட் படங்களை கொடுத்துவிட்டனர். இதனால் தளபதி-63 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது. இதன் இடையே நேரம் கிடைக்கும் போது அட்லீ மனைவி ப்ரியாவுடன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் சுற்றி வருகிறார்.

அங்கு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது டிராகுலா போன்ற வேடம் அணிந்த நபர் ஒருவர் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்கிறார்.

இந்தியா என்று சொன்னதும் காரமான சாப்பாடுகள் இருக்கும் என்று கூறிவிட்டு நீங்கள் மரணத்திற்கு தயாரா இன்னும் 5 நிமிடம் தருகிறேன் என்று பயமுறுத்துகிறார்.

பிரியாவிடம் உங்கள் கணவர் இனிமேல் உங்களுக்கு கிடையாது, இனி நீங்கள் எனக்கு தான் என நகைச்சுவையாக பேசியும் உள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]