தளபதி-63 படம் குறித்த புதிய அப்டேட் இதோ!..

விஜய்-அட்லீ கூட்டணி இணைந்திருக்கம் மூன்றாவது படம் தளபதி-63. இந்த படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், யோகி பாபு, கதிர் என பலர் நடித்து வருகின்றனர்.

படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இவர் ஆளப்போறான் தமிழன், சிம்டாங்காரன் என சூப்பர் ஹிட் பாடல்களை அவர் கொடுத்தார். அதிலும் சர்கார் படத்தின் வந்த சிம்டாங்காரன் பலரையும் ஈர்த்ததற்கு காரணம் புதுமையான வார்த்தைகள் கொண்ட வரிகள் தான். பாடலாசிரியர் விவேக் இதை எழுத அதை பம்பா பாக்யா முழுமையாக சிங்கிளாக பாடினார்.

தற்போது விஜய் 63 படத்தில் மீண்டும் இந்த மூவர் கூட்டணி அமையப்போவது அண்மையில் உறுதியானது. ஆனால் தற்போது இதில் அவர் ஒரு பல்லவி மட்டுமே பாடியுள்ளாராம். அதிலும் இது படத்தில் வருமா என்பது தெரியாது என அதிர்ச்சி தகவலையும் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]