தளபதி -63 குறித்து முதல்முறையாக விஜய் கூறிய தகவல்! சூப்பர் அப்டேட்!

நடிகர் விஜய் தற்போது தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைப்பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்த படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது  இதனால் இது விளையாட்டு துறையில் இருக்கும் அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதையாக இருக்கும் பலரும் நினைத்தனர்.

ஆனால் இந்த படத்தின் கதை வித்தியாசமானதாம். அண்மையில் நடிகர் விஜய் வெற்றி திரையரங்கில் உரிமையாளரை சந்தித்து பேசியபோது, தளபதி 63 ஒரு கலர்ஃபுல்லான படம், இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் விரும்புவார்கள். நான் நடித்த கடைசி படங்கள் எல்லாம் கொஞ்சம் சீரியசாக போயிடுச்சு. அதுவும் இந்த பிரஸ் முன்னாடி பேசறதெல்லாம் எனக்கு மிகவும் போர் அடித்து போயிடுச்சு’ என்று கூறியுள்ளார். எனவே, இந்த படம் சீரியசாக இல்லாமல் அது ஜாலியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]