தளபதி 63 கதை என்னுடையது நீதிமன்றம் சென்ற குறும்பட இயக்குநர்!

தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லீ கூட்டணி இணைந்துள்ள படம் தளபதி 63. இது பெண்கள் கால்பந்து பற்றிய கதை என தகவல்கள் வந்தது. படப்படிப்புகள் வேகமாக சென்னையில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் கே.பி.செல்வா எழுத்தாளர் சங்கத்தில் புகார் செய்துள்ளார்.

எனினும் இவர் எழுத்தாளர் சங்கத்தில் இணைந்து 6 மாதங்கள் ஆகவில்லை என கூறி புகாரை நிராகரித்துள்ளனர்.

ஆனால் இவர் நீதிமன்றத்திற்கு சென்றதால், தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரனை வரும் 23ஆம் திகதி நடைப்பெறவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]