தளபதி 63இன் பெயர் இதுவா? அட்லீ அணிந்து வந்த டி-ஷர்டின் ரகசியம்!

தளபதி விஜய் அட்லீ இயக்கும் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விளையாட்டுடன் தொடர்புடைய கதை என்பது தெரிந்த விடயம் தான்.

இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ஆனாலும் விஜய், கால்பந்து வீரராக நடிக்கிறார் என்றும், அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தளபதி 63 படத்தின் பெயர் ’மைக்கேல் கோர்ஸ்’ என ஒரு தகவல் பரவி வருகிறது.

அண்மையில் IPL போட்டியை பார்வையிட சென்றிருந்த அட்லீ அணிந்திருந்த டி-ஷர்ட்டில் மைக்கேல் கோர்ஸ் என்று அச்சிடப்பட்டிருந்ததாகவும், இதன் காரணமாக படத்தின் பெயர் மைக்கேல் கோர்ஸ் எனவும் செய்திகள் கசிந்தது.

இது தொடர்பில் படகுழு எந்த தகவலையும் வெளியிடவில்லை. அட்லீ அந்த டி-ஷர்ட் அணிந்து வந்தது தற்செயலாக நடந்ததாகவும் படத்தின் பெயர் மைக்கேல் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]