தளபதி-62 படத்தில் பிரபல நடிகர் பரத் நடிக்கவுள்ளாரா??

தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தளபதி-62 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்த படத்தில் பிரபல தமிழ் நடிகரான பரத் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது. இது குறித்து தற்போது பரத் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தளபதி-62 படத்தில் நான் நடிக்கவில்லை, இது வெறும் வதந்தி தான் என விளக்கம் அளித்துள்ளார். பரத் ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி இருந்த ஸ்பைடர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]