தளபதி 62 படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏ.ஆர்.முருகதாஸின் டான்ஸ் ஐ நீங்களும் பாருங்க – வீடியோ உள்ளே

தீபாவளி என்றதுமே புத்தாடைகள், இனிப்புகளுக்கு சமமாக நினைவுக்கு வருவது புதிய படங்கள் தான். அப்படியான கிராண்ட் தீபாவளி ரிலீஸுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது தளபதி 62.

விஜய் நடிக்கும் இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஜய்யை வைத்து துப்பாக்கி மற்றும் கத்தி ஆகிய இரு படங்களையும் இயக்கியிருந்தார். அந்த இரண்டு படங்களுமே தீபாவளிக்கு தான் ரிலீஸ் ஆகியிருந்தது. தற்போது ஹேட்ரிக் ரிலீஸிற்காக தளபதி 62-ஐ கூர் தீட்டிக் கொண்டிருக்கிறார்.

இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ், வரலக்‌ஷ்மி சரத் குமார், ராதா ரவி, பழ.கருப்பையா, யோகி பாபு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது. தற்போது முருகதாஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தளபதி 62 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் ஏ.ஆர்.முருகதாஸ் ஜாலியாக கொட்டடித்து ஆடுகிறார். இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]