தளபதி விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை தற்போது படபிடிப்புக்கு தயாராகிவிட்டது!

தளபதி விஜய் வியந்து கேட்டு பாராட்டிய கதை தற்போது படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டது!

தளபதி விஜய்

தளபதி விஜய்யின் பாராட்டை பெற்ற இந்தக் கதையினை இளம் இயக்குனரான மஹாவிஷ்ணு இயக்க, கயல் பட நாயகன் “சந்திரன்” நாயகனாகவும், பிரேமம் பட புகழ் “அஞ்சு குரியன்” நாயகியாகவும் நடிக்க இருக்கும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.

தளபதி விஜய்

இப்படத்தின் காட்சிகள் சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் படமாக்கப்பட உள்ளதாக இப்பட்டத்தின் தயாரிப்பு நிர்வாகிகள் சுரேஷ் ராஜா மற்றும் பிரகாஷ் மனோகரன் கூறியுள்ளனர். மேலும் இக்கதை இதுவரை தமிழ் சினிமா காணாத ஒரு புதுவகை கருவை மையமாக கொண்டது என்றும், கதை முழுதும் ரசிக்கத்தக்க காதலும், நகைச்சுவையும், எதிர்பாராத கதைத்திருப்பங்களும் கொண்ட சுவாரஸ்யமான படமாக இருக்கும் என்றும் கதையைக்கேட்ட முக்கிய முன்னணி நடிகர்கள் கூறியுள்ளனர்.

தளபதி விஜய்

இயக்குநர் மஹாவிஷ்ணுவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான “Writer Imaginations” இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. மஹாவிஷ்ணுவின் நெருங்கிய நண்பரான JFB Group’ன் நிறுவனர் ஃபாரூக் இப்படத்தின் தயாரிப்பு பணிகளில் இணைகிறார். இந்த Writer Imaginations நிறுவனம் இந்தியாவின் மாபெரும் வெற்றிப்படமான “துருவங்கள் பதினாறு” திரைப்படத்தினை கேரளாவில் முழுவதும் விநியோகித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]