தளபதி ரசிகர்களை குஷிப்படுத்திய G.V. பிரகாஷ்குமார்!

 

தளபதி ரசிகர்களை குஷிப்படுத்திய G.V. பிரகாஷ்குமார்!

இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ திரைப்படமும், G.V. பிரகாஷ் நடித்த ‘புரூஸ் லீ’ திரைப்படம் வருகின்ற  பொங்கல் திருநாளில் வெளியாகவுள்ளது.

விஜய்யின் தீவிர ரசிகரான G.V. பிரகாஷ், ‘அண்ணாவோட வர்றோம்’ என்று விளம்பரப்படுத்தி விஜய் ரசிகர்களையும் கவர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர் ஒருவர் ‘பொங்கல் திருநாளில் எந்த படத்தை முதலில் பார்ப்பீர்கள்’ என்று கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள G.V. பிரகாஷ்,

விஜய்யின் பைரவா’ படத்தை தான் முதலில் பார்ப்பேன். அதன் பின்னரே நான் நடித்த ‘புரூஸ் லீ’ படத்தை பார்ப்பேன்’ என்று கூறியுள்ளார்.

இந்த பதில் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் இந்த படத்திற்கு நல்ல ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.