முகப்பு Cinema தளபதி ரசிகர்களுக்கு அக்டோபர் 2ல் காத்திருக்கும் விருந்து- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி ரசிகர்களுக்கு அக்டோபர் 2ல் காத்திருக்கும் விருந்து- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தின் டீசர் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி இந்த படத்தின் பாடல்கள் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகார்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான ஐந்தே நிமிடங்களில் சர்கார் ஆடியோ ரிலீஸ் குறித்த டுவிட்டர் ஹேஷ்டேக் தமிழக அளவில் டிரெண்டுக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஆயிரக்கணக்கான டுவீட்டுகள் பதிவாகி வருவதால் இன்னும் சில நிமிடங்களில் இந்த டிரெண்ட் உலக அளவுக்கு சென்றாலும் ஆச்சரியமில்லை

ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மெர்சல்’ பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் ஆனதால் அதேபோல் இந்த படத்தின் பாடல்களும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் திருவிழா பாடல் ஒன்றை ரஹ்மான் கம்போஸ் செய்துள்ளதாகவும், அந்த பாடல் ‘ஆளப்போறான்’ பாடலுக்கு இணையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com