தளபதியின் அடுத்த பட இயக்குனர் இவரா?

தளபதியின் அடுத்த பட இயக்குனர் இவரா?

தளபதி விஜய் தற்போது சர்கார் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகின்றார்.

அந்தவகையில், அட்லீ மீண்டும் தளபதி விஜய்யுடன் தான் இணைந்து பணியாற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் ஏற்கனவே தெறி, மெர்சல் ஆகிய இரண்டு திரைப்படங்களின் மூலம் விஜய்யுடன் சேரந்து பணியாற்றியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

விஜய்- அட்லீ கூட்டணியில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்த படத்தையும் விஜய்யை வைத்து இயற்றவுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால், இதுக்குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்ற போதும், அட்லீ தன் குழுவுடன் ஒரு மலை பிரதேசத்திற்கு சென்றுள்ளார்.

எனவே கதை விவாதத்திற்காக தான் அட்லீ அங்கு சென்றிருப்பார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், இந்த முறை ஒரு ஸ்பை த்ரில்லர் கதையாக தான் இப்படம் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

தளபதியின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]