தல-59 பிங்க் படத்தின் ரீமேக்; தல-60 எந்த படத்தின் ரீமேக் தெரியுமா?

தல அஜித் தனது 59வது பட வேலைகளில் பிசியாகவுள்ளார். இந்த படம் ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீமேக். இந்த படத்தை வினோத் இயக்கிவருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில், அஜித் தனது 60வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் மே மாதம் ஷூட்டிங் துவங்கி அடுத்த வருடம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

தற்போது இந்த படம் பற்றிய தகவல் ஒன்று கசிந்துள்ளது. Hepta: The Last Lecture என்கிற எகிப்திய படத்தின் ரீமேக் உரிமையை போனி கபூர் வாங்கியுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. அதை தான் அஜித்தை வைத்து அவர் தமிழில் ரீமேக் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.

Mohamed Sadek எழுதிய Hepta முழுக்க முழுக்க காதல் கதையான இதில் ஒரு காதலின் 7 நிலைகள் பற்றி காட்டப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]