“தல புட்டுவா” விவகாரம்: தேரருக்கு வலைவீச்சு

“தல புட்டுவா” என்ற யானையைக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேரர் ஒருவரையும் பொறியியலாளர் ஒருவரையும் தேடி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொல்பித்திகம பிரதேச விகாரை ஒன்றின் விகாராதிபதி, கல்கமுவ பிரதேச நீர்பாசன நிர்வாகப் பொறியியலாளர் ஆகியோரைக் கைதுசெய்யும் பொருட்டே, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 1ஆம், 2ஆம் சந்தேகநபர்களிடம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே, தேரரும் பொறியியலாளரும் கைதுசெய்யப்படவுள்ளனர்.

எனினும், குறித்த சந்தேகநபர்கள் இருவரும் தம்மை கைதுசெய்வதைத் தடுப்பதற்கான நீதிமன்ற உத்தரவை கோரி, நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனரென, தகவல் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]