முகப்பு Cinema தல அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு

தல அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு

தல அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படத்தின் கன்னட பதிப்பு டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

‘தல’ அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான படம் ‘விவேகம்’. கடந்த 2017ம் ஆண்டு ரிலீசான இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். விவேக் ஒப்ராய் வில்லனாக நடித்திருந்தார். இப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த போதிலும், அஜித் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் கணிசமான வசூலையும் பெற்றது.

இதைத்தொடர்ந்து தற்போது, ‘விவேகம்’ படத்தை கன்னடத்தில் டப் செய்து வெளியடவுள்ளனர். இதனையடுத்து கன்னட பதிப்பு டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

படத்துக்கு ‘கமாண்டோ’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதன் கர்நாடக வெளியீட்டு உரிமையை ஹரிவு கிரியேஷன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகவின் இதர திரையரங்குகளில் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com