தல அஜித்துடன் இணையும் இசை வாரிசு

தல அஜித், இயக்குனர் சிவா கூட்டணியில் வெளியான ‘வீரம்’, ‘வேதாளம்’ படங்கள் சூப்பர் ஹிட்டானது.

Ajith

இப்படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் வெளியான ‘விவேகம்’ படம் பல்வேறு விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடமும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ajith

மேலும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க இருப்பதாக குறிப்பிடப்பட்டது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Yuvan Shankar Raja

இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே யுவன் ஷங்கர் ராஜா,இசையில் அஜித்தின் பில்லா, ஏகன், மங்காத்தா, பில்லா 2, ஆரம்பம் உள்ளிட்ட படத்தின் பாடல்கள் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]