தலையின்றி உயிர்வாழும் அதிசய கோழி!!

தாய்லாந்தில் தலை வெட்டப்பட்ட கோழி உயிருடன் வாழ்ந்து வருதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன் தலை வெட்டப்பட்ட நிலையில், காணப்பட்ட கோழி ஒன்றை மருத்துவர் ஒருவர் பிடித்து வளர்த்து வந்துள்ளார். இதனை சுபகாடி அருண் தொங் என்ற மருத்துவரே வளர்த்து வருகின்றார்.

இந்நிலையில் தற்பொழுதும் இக்கோழி உயிருடன் காணப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இக்கோழிக்கு தலை வெட்டப்பட்டு, தலை இருந்த இடத்தில் இரத்த கறை மட்டுமே காணப்படுகின்றது.

கடந்த 1945 ஆம் ஆண்டு காலகட்டத்திலும், இதுபோன்று 18 மாதங்கள் தலையில்லாமல் உயிருடன் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]